ஆம்னி பேருந்து கவிழ்ந்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி பகுதியில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.மதுரையிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி 46 பயணிகளுடன் எஸ்.பி.எஸ்., என்ற தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்த ஆம்னி பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி மறுகரையில் உள்ள தர்மபுரி சாலையில் 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!