undefined

 சிறை கலவரத்தில்  கையெறி குண்டு வெடிப்பில் 31 கைதிகள் பலி!

 
 

தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடார் நாடு, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் தளமாக மாறி வரும் நிலையில், மச்சாலா நகரின் எல் ஓரோ சிறைச்சாலையில் நடந்த மோதல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இரு கும்பல் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், கையெறி குண்டுகள் வீசப்பட்டதுடன், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கினர்.

இந்த மோதலில் நான்கு கைதிகள் உயிரிழந்ததுடன், மூச்சுத்திணறி 27 பேர் உயிரிழந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறைச்சாலையின் பாதுகாப்பு நிலை குறித்தும், கைதிகளிடையே நிலவும் வன்முறைகள் குறித்தும் மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஈகுவடாரின் பல சிறைகளில் தொடர்ந்து இத்தகைய மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், அதிதீவிர பாதுகாப்புடன் புதிய சிறைச்சாலையை அரசு கட்டி வருகிறது. அதனை அடுத்த மாதம் அதிபர் டேனியல் நோபோவா திறக்க உள்ளார். இதற்கிடையில், எல் ஓரோ சிறையில் உள்ள சில கைதிகளை அங்கு மாற்றும் திட்டத்தை அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!