நாளை 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை... மீனவர்களுக்கு எச்சரிக்கை!
வடகிழக்கு பருவமழை ஆரம்பமானதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், பகலில் கடும் வெயில், மாலையில் மழை, இரவில் பனிமூட்டம் என வானிலை மாறுபாடு பொதுமக்களை சிரமப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்படி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், நவம்பர் 17 வரை தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நெல்லை மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேசமயம், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியசும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குமரிக்கடலில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் கடும் காற்று வீசும் நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க