சென்னையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி 4 பேர் படுகாயம்!
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் நேற்று தறிகெட்டு ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஓடிய கார் அடுத்தடுத்து சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி, இருசக்கர வாகனம், ஆட்டோ, ட்ரை சைக்கிள் என்று அடுத்தடுத்து தொடர்ந்து மோதி விபத்திற்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் அதிவேகமாக வந்துக் கொண்டிருந்த கார் திடீரெனெ கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து மோதியது. இளநீர் வியாபாரி ஒருவர், இருசக்கர வாகன ஓட்டி, நடந்து சென்ற நபர்கள் என 4 பேர் கார் மோதியதில் படுகாயமடைந்து இராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து போலீசார் காரை அதிவேகத்தில் இயக்கி விபத்து ஏற்படுத்திய திருவொற்றியூரைச் சேர்ந்த பிரகதீஷ் என்பவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!