பாம்பன் தூக்குப்பாலத்தில் 40 படகுகள் அணிவகுப்பு !
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக பெரும் கப்பல்கள் கடந்து செல்வதுண்டு. தற்போது தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகுகள் கரைக்கு திரும்ப மீனவர்கள் கோரிக்கையை ஏற்று பாம்பன் தூக்குப்பாலம் வழியாக மீன்பிடி படகுகள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
ராமேஸ்வரத்தில் பழைய ரயில் பாலத்திற்கு அருகே புதிய ரயில்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தூக்குப்பாலம் பொருத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பழைய தூக்குப்பாலம் வழியாக படகுகள், கப்பல்கள் செல்ல ஏப்ரல் 5ம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்ததால் சென்னை கடற்பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு இருந்த மீனவர்கள் ஒரு நாள் மட்டும் தூக்குப்பாலத்தை திறக்கும்படி மீன்வளத்துறை முதன்மை செயலாளருக்கு அவசர மனு அளிக்கப்பட்டது.
மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தூக்குப்பாலம் திறக்கப்பட்டதால் 40க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக தூக்குப்பாலம் வழியாக அணிவகுத்து சென்றனர். இதனை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது மொபைல் போன்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துக் கொண்டனர். இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!