undefined

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் 43 சேவைகள்...  என்னென்ன... முழு தகவல்கள்! 

 

தமிழகத்தில்  ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்குத் தேவையான அரசுத் துறை சேவைகள் நேரடியாக மக்களின் வசதிக்கு ஏற்ப முகாம் முறை மூலம் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மக்கள் அலுவலகங்களுக்கு திரிந்து அலையாமல், தேவையான சேவைகளை தங்கள் வசதியான இடத்திலேயே பெற்று பயன்பெறச் செய்வதாகும்.

மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி பெற்றுள்ள மற்றும் இதுவரை பெற தவறிய பெண்கள், இந்த முகாம்களில் மட்டும் விண்ணப்பிக்கலாம். வெளியில் அல்லது வேறு இடங்களில் இந்த விண்ணப்பங்கள் கிடைக்காது. அரசு அலுவலகங்களிலும் இதற்கான நேரடி விநியோகம் நடைபெறாது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்  . விண்ணப்பம் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு நேரில் முகாமில் மட்டும் ஒப்படைக்க வேண்டும் என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகள் மற்றும் நகர்ப்புறங்களில் 13 துறைகளின் 43 சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.  

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம்
குடிநீர் இணைப்பு
மின் இணைப்பு / பெயர் மாற்றம்
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்
வருமான, இருப்பிடம், சாதி சான்றிதழ்கள்
முதியோர் உதவித்தொகை
சுய உதவிக்குழு கடன் விண்ணப்பம்
ரேஷன் கார்டு முகவரி மாற்றம்
இணையவழி வீட்டு மனை பட்டா
கட்டிட வசதி சான்றிதழ்

இந்த முகாம்கள் நவம்பர் 30ம் தேதி வரை   மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புறத்தில் 3,768 முகாம்களும், ஊரகத்தில் 6,232 முகாம்களும் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் முகாம்களின் தேதி மற்றும் இட விவரங்களை பொதுமக்கள் https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முகாம்களில் வழங்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து விண்ணப்பங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு பயனாளிகளின் பட்டியல் வெளியிடப்படும். முகாம் நடைபெறும் நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆகும். இதன் மூலம் அரசு சேவைகளை மக்கள் நலன் கருதி கொண்டு வருவதே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் குறிக்கோளாகும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?