5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்... மேற்கு வங்க சட்டப்பேரவையில் பரபரப்பு!
மேற்கு வங்க மாநிலத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர், செப்டம்பர் 2ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கியது. அசாம், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்களின் மீது வன்முறை நடத்தப்படுவதாக மேற்கு வங்க அரசு குற்றம்சாட்டியது.
அந்த விவகாரம் குறித்த சிறப்புத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், அதற்கு எதிராக அமளியில் ஈடுபட்ட அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி அன்று செப்டம்பர் 2ம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தத் தீர்மானம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சியான பாஜகவின் கொறடா சங்கர் கோஷ் அமளியில் ஈடுபட்டனர். றப்பு கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஒருநாள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்ட சங்கர் கோஷ் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
அமளியில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர்களான அக்னிமித்ரா பால், மிஹிர் சோசுவாமி, அசோக் டிண்டா மற்றும் பன்கிம் கோஷ் ஆகியோரும் சபாநாயகரால் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இச்சம்பவம் மேற்கு வங்க அரசியலில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!