மணல் கொள்ளை விவகாரம்...  இன்று 5 மாவட்ட கலெக்டர்கள் ED அலுவலகத்தில் நேரில் ஆஜர்!

 

 தமிழகம் முழுவதும் உள்ள  மண் குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும்  கூடுதலாக மணல் அள்ள  முறைகேட்டில் ஈடுபடுவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றங்களும் அதிகரித்து வருவதாக கூறப்பட்டது. அதன்படி  திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர்  5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. 
 
தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.  ஏப்ரல் 2ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்   தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட்டால் மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் கால அவகாசம் கேட்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து  ஏப்ரல் 25ம் தேதி மணல் கொள்ளை வழக்கில் அமலாக்க துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள்  நேரில் ஆஜராக வேண்டும்   சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கின் விசாரணை  மே 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஏப்ரல் 25ம் தேதி  சென்னையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.  விசாரணைக்கு அமலாக்கத்துறை முன் ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், தஞ்சை, திருச்சி, அரியலூர், கரூர், வேலூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!