undefined

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவில் 5 லட்சம் பேர்... அமைச்சர் சேகர்பாபு!  

 

இன்று காலை உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில்   வெகுசிறப்பாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழாவை நேரில் காணவும், சாமி தரிசனம் செய்யவும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து  லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.


இந்நிகழ்வு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். இன்னும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025 இறுதிக்குள் 5 கோவில்களில் விரைவு தரிசனம், ஆன்லைன் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். நாங்கள் யாரையும் மேடை ஏறி திராவிடத்தை ஒழிப்போம் என கூறவில்லை. இன்று ஒலித்த மந்திரங்கள் அத்தனையும் ‘முருகனுக்கு அரோகரா’ என்று தான் ஒலித்தது. இதுதான் ஆன்மீகத்திற்கான உண்மையான மாநாடு . திருச்செந்தூர் குடமுழுக்கு பக்தர்கள் மாநாடு, பாஜகவினரின் மாநாடு அல்ல.

இனிமேல் எல்லா கோயில்களிலும் தமிழ் மொழியிலேயே குடமுழுக்கு மந்திரம் முழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வயலூர் முருகன் கோயிலில் அனைத்து ஜாதிகளும் அர்ச்சகாரர்களாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திராவிட மாடல் அரசு, பெரியார், அண்ணா, கலைஞர் கனவுகளை நிறைவேற்றி வருகிறது” என கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?