5 தமிழர்கள் குவைத் தீவிபத்தில் பலி?... அமைச்சர் அதிர்ச்சி தகவல்!
குவைத்தில் நேற்று அதிகாலை புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் பலர் உடல் கருகி பலியாகினர். அதன்படி 50க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழப்பு குறித்து இந்திய தூதரகம் இன்னும் தகவல்கள் எதையும் உறுதி செய்யவில்லை எனத் தெரிகிறது.
குவைத் தீ விபத்தில் சிக்கியுள்ளவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் கருப்பண்ணன் ராமு, வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகமது ஷரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்து இருப்பதாக வெளிநாடு வாழ் தமிழர் நலவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உடனடியாக நிவாரண பணிகளை மேற்பார்வையிடுவதற்கும் உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு அனுப்புவதை விரைவுப்படுத்தவும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் விரைவதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் உயிரிழந்த இந்திய குடிமக்களின் குடும்பங்களுக்கு தலா ரூ2லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!