undefined

7 மாதங்கள் மின்சார ரயில் சேவை ரத்து!! பயணிகள் அதிர்ச்சி!!

 

சென்னையில்  பொதுப்போக்குவரத்துக்கு பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது மின்சார ரயில்களை தான். குறைவான கட்டணத்தில்  விரைவான பயணங்கள் காரணமாக தினமும் லட்சக்கணக்கான மக்கள்  கடற்கரை மற்றும் தாம்பரம் வழித்தடத்தில் தினமும் பயணித்து வருகின்றனர் . ரயில்வே நிர்வாகத்தின் தகவலின் படி  தினமும்  3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.  

இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3  ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இவற்றில்  2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 4வது ரயில் பாதை இல்லாத காரணத்தால் கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களோ குறிப்பிட்ட நேரத்தில்  வந்து சேர முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

சென்னை கடற்கரை எழும்பூர் 4வது பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் 4வது ரயில் பாதை வழிதடத்தில் பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் ஜூலை 1ம் தேதி முதல்  ஜனவரி 31ம் தேதி வரை 7மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்