undefined

 70 ஏக்கர் கசகசா பயிர் அழிப்பு... மணிப்பூரில்  பரபரப்பு!

 

 மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள 3  கிராமங்களில் போலீசார், வனத்துறை மற்று அஸ்ஸாம் ரைபிள் படையின் கூட்டு சோதனையில்   சுமார் 70 ஏக்கரில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட கசகசா அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலே, தோரா மற்றும் சாம்புங் கிராமங்களின் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த கசகசா பயிர்கள் போதைக்கு பயன்படுத்த சட்டவிரோதமாக பயிரிடப்பட்டதால் அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  அப்போது அந்த தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 13 குடிசைகளும் எரிக்கப்பட்டுள்ளன. இங்கு சட்டவிரோதமாக பயிரிட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.  

மணிப்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் உக்ருல் மாவட்டத்தில் உள்ள ஷைகாய் குல்லென் மலைத்தொடரில் சுமார் 55 ஏக்கர் சட்டவிரோத கசகசா சாகுபடியை அழித்துள்ளனர்.  2017 ம் ஆண்டு முதல் இதுவரை 12 மாவட்டங்களில் 19135 ஏக்கர் சட்டவிரோத கசகசா பயிர்களை மணிப்பூர் அரசு அழித்துள்ளது. இதில் கங்போக்பி மாவட்டத்தில் 4454 ஏக்கரும், உக்ருல் மாவட்டத்தில் 3348 ஏக்கரும், சுராசந்த்பூரில் 2713 ஏக்கரும் அழிக்கப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!