டிராக்டர் மீது லாரி மோதியதில்   8 பேர் பலி, 43 பேர் காயம்... கோவிலுக்கு சென்ற போது சோகம்! 

 
 

 


 
உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஸ்கஞ்சில் இருந்து ராஜஸ்தானில் உள்ள கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது.  இந்த டிராக்டர் அர்னியா நெடுஞ்சாலை அருகே புலந்த்ஷாஹர்-அலிகார் எல்லையில் அதிகாலை 2.10 மணிக்கு  டிராக்டர் பின்னால் இருந்து லாரி திடீரென மோதியது.

இதில் டிராக்டர் கவிழ்ந்ததில்  8 பேர் பலியாகினர். மேலும் 43 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் கிடைத்ததும்   மக்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த  விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி அதிவேகமாக வந்ததே விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளான டிராக்டரில் 61 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?