8 முறை எம்.எல்.ஏ., முன்னாள் மந்திரி! பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் காலமானார்! 

 

பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் ஆரியதான் முகமது,  உடல்நல குறைவால் கேரளாவில் காலமானார். 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆரியதான் முகமது (87), கேரளா மலப்புரம் மாவட்டத்தில் நிலாம்பூர் தொகுதியில் எட்டு முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர். கேரள அரசில் முன்னாள் மந்திரியாகவும் பதவி வகித்தவர் ஆரியதான். 1952ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரான ஆரியதான்,  தொடர்ந்து கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியில் 1958ம் ஆண்டு வரை இருந்தவர். 

ஈ.கே. நாயனார் பதவி காலத்தில் தொழிலாளர் மற்றும் வன துறை மந்திரியாகவும், ஏ.கே. அந்தோணியின் அமைச்சகத்தில் தொழிலாளர் மற்றும் சுற்றுலா துறை மந்திரியாவும், உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சகத்தில் மின்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர் ஆரியதான். 

வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலை காலமானார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!