நாளை செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

 
காசு செல்வம் மகாலட்சுமி பூஜை

புரட்டாசி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பெருமாள் தான். இந்த மாதத்தை பெருமாள் மாதம் என்கிறோம். புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் தவிர்த்து பெருமாளை வழிபட்டு வர வாழ்வில் மேலான இன்பங்கள் கூடும். இது வரை நாம் அனுபவித்து வந்த  இன்னல்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் பறந்தோடும். வளமான  வாழ்வு பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.  . தமிழ் மாதங்களில் 6வது மாதமான புரட்டாசி கன்னி ராசிக்குரிய மாதமாக இந்த மாதம் அனுசரிக்கப்படுகிறது. 

காசு செல்வம் மகாலட்சுமி பூஜை

பெருமாள் ஆலயங்கள் அனைத்துமே திருவிழா தான் என்றாலும்  திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என தினமும் திருவிழா தான்.புரட்டாசி மாதத்தில் பல்வேறு சிறப்புகள் உண்டு.வாழ்வில் அனைவருக்குமே சுக்கிர யோகம் மிக மிக முக்கியம். சுக்கிர யோகம் பெற மகாலட்சுமியின் அருள் வேண்டும். வெள்ளிக்கிழமை என்றாலே சுக்கிரவார் என அர்த்தம். இந்த நாளில் வீடுகளில் அதிகாலையும் மாலையும் விளக்கேற்றி வழிபாடு செய்திட மகாலட்சுமி வீட்டிலேயே வாசம் செய்வாள்.


இன்றைய தினமே வீடு , வாசல் சுத்தம் செய்து நாளை அதிகாலை எழ வேண்டும். பூஜை அறையில் சுத்தம் செய்து , மாக்கோலமிட்டு விளக்கேற்றி வழிபட வேண்டும். வேண்டிய வரம் அருள விநாயகர் வழிபாடு, குலதெய்வ பூஜை செய்ய வேண்டும். அவரவர் குடும்ப வழக்கப்படி நித்ய பூஜைகளை முடிக்க வேண்டும். அதன்பிறகு மகாலட்சுமியை மனமுருகி  செல்வம் நிலைத்திருக்க பிரார்த்தனை செய்ய வேண்டும். மகாலட்சுமி துதி, பாடல்கள், ஸ்லோகங்கள், அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்கரநாமம் , போற்றி துதிகள் சொல்லலாம். நாள் முழுவதும் உபவாசம் இருக்கலாம். இயலாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம். மாலை அருகில் இருக்கும் பெருமாள் ஆலயங்களில் தாயாரை தரிசித்து வரம் அருள பிரார்த்திக்க வேண்டும். வீடுகளில்  நைவேத்தியமாக மகாலட்சுமிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி செய்து வழிபாடு செய்திட . வேண்டும். இப்படி வழிபாடு செய்திட வேண்டிய வரம் அருள்வாள் என்பது அனுபவஸ்தர்களின் வாக்கு.

பெருமாள்
அதிலும் குறிப்பாக புரட்டாசி வெள்ளிக்கிழமையில், மகாலட்சுமிக்கு விரதம் இருந்து வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம். இதுவரை வந்த அனைத்து துன்பங்களும் பறந்தோடும். துக்கங்கள், கவலைகள், இன்னல்கள் அனைத்தும் பறந்தோடிவிடும். உடல் வழக்கமான வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் மனம் அம்பிகை மகாலட்சுமி துதிகளை சொல்லிக் கொண்டிருப்பது சிறப்பு . புண்ணியம் நிறைந்த புரட்டாசியில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நாளை மகாலட்சுமியை மனதார பிரார்த்தனை செய்து வழிபடுவதும், அவளுக்குரிய துதிகள், பாடல்கள் பாடுவதும் கூடுதல் சிறப்பான பலன்களை தரும். அம்பிகையின் தாள் பணிவோம். வாழ்வில் வளம் பெறுவோம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web