14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள்... அவசர நிலை பிரகடனம்..!!

 

ஐரோப்பிய நாடுகளில்   ஐஸ்லாந்தில்  அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தை மையமாக கொண்டு தொடர்ச்சியாக நிலநடுக்கம்  ஏற்பட்டது. கடந்த 14 மணிநேரத்தில் மொத்தம் 800 நிலநடுக்கம் பதிவாகியுள்ளன.

இதில் வடக்கு ஹிரிண்டவிக் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 5.2  ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்டு வரும்  இந்த நிலநடுக்கத்தால் ஐஸ்லாந்தில் தேசிய அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடிப்பிற்கு முன்னதாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!