இன்று முதல் தமிழகம் முழுவதும் 8000 சிறப்பு பேருந்துகள்...  

 

இன்று  அக்டோபர் 23ம் தேதி திங்கட்கிழமை  ஆயுத பூஜை நாளை  விஜயதசமி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தொடர்ந்து 4  நாட்கள்  விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர்  சொந்த ஊர் சென்றுள்ளனர்.  மக்களின் தேவைகளின் அடிப்படையில்   தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழக அரசு சார்பில் செப்டம்பர்  20ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படும்  என ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.   மேலும்   கோவை, திருப்பூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து தமிழகத்தின்  பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


 இந்த விடுமுறை நாட்களில் அதிக அளவு  பயணிகள் அதிகமாக பயணிப்பார்கள்.இதனால்   அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் தவறாமல் அவரவர் பணிக்கு வந்து பணி செய்ய வேண்டும் .  விடுமுறை எடுக்க கூடாது எனவும்  தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.இந்நிலையில், ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள் மூலம் 4.80 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.   கடந்த 3 நாட்களில் 8,003 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன

இந்நிலையில் புதன்கிழமை வரை பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, ஆயுத பூஜை விடுமுறைக்காக சென்னையில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ள நிலையில், விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக தமிழகம் முழுவதும்  8000 பேருந்துகள் இயக்கப்படும்.  இந்த பேருந்துகள் இன்று முதல் புதன்கிழமை வரை இயக்கப்படும் என  போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!