undefined

  சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து ஜப்பானில் 9 லட்சம் பேர் வெளியேற்றம்!

 

 

ரஷியாவின் கம்சாட்கா தீபகற்ப பகுதிக்கு அருகில் புதன்கிழமை காலை 8.25 மணிக்கு பூமிக்கு அடியில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 8.7 ரிக்டர் அளவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ரஷியா மட்டுமின்றி, ஜப்பான், ஹவாய், அலாஸ்கா ஆகிய பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் 1 மீட்டர் வரை சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஜப்பானின் வடக்கு திசையில் உள்ள தீவான ஹொக்கைடோவின் தெற்கு கரையில் அமைந்துள்ள டோகாச்சியில் 40 செமீ (சுமார் 1.3 அடி) அளவில்  அலைகள் மேலேழும்பியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கையை  தொடர்ந்து ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஹொக்கைடோ முதல் ஒகினாவா வரை 133 நகராட்சிகளில் உள்ள 9 லட்சத்துக்கும் அதிகமானோர்  வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இஷினோமாகியில் 50 சென்டிமீட்டர் (1.6 அடி) அளவுக்கு அலைகள் மேலெழும்பியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?