ஒரே மேடையில்  முதல்வர் , நடிகர் பிரபாஸ் !!  தசரா சிறப்பு கொண்டாட்டம்!!

 

புரட்டாசி மாதம் அமாவாசை தொடங்கி தசமி வரை தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. நடப்பாண்டுக்கான தசரா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்தியாவின் வட பகுதியில் ராவணனை ராமன் வதம் செய்த நாளாக ராம் லீலா கொண்டாடப்படுகிறது.   இந்த கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக  ராவணன், கும்பகர்ணன் மற்றும் ராவணனின் மகன் மேகநாதனின் உருவபொம்மைகள் மீது அம்பு எய்யப்படுவதும் வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தசரா கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அதன்படி இன்று தசரா கொண்டாட்டம் டெல்லி செங்கோட்டை மைதானத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.

அங்கு பல அடி உயரத்திற்கு ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாத்தின் உருவ பொம்மைகள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. எதிர்பாராத சூழ்நிலைகளால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பிரபல நடிகர் பிரபாஸ் மற்றும் தலைநகர் டெல்லி முதல்வர் இருவரும் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் ராவணன், கும்பகர்ணன் மீது அம்பு எய்கிறார்கள். 

இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் லவ் குஷ் ராம்லீலா கமிட்டி தலைவர் அர்ஜூன் குமார் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து இந்த, தசரா விழா கொண்டாட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தெலுங்கு நடிகர் ‘பாகுபலி’ புகழ் பிரபாஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். 

உலக புகழ்பெற்ற இந்த தசரா கொண்டாட்டத்தில், டெல்லி முதல்-வர் கெஜ்ரிவால் தலைமை தாங்குகிறார். மேலும் நடிகர் பிரபாஸ் மற்றும் கெஜ்ரிவால் இணைந்து, ராவணன் உருவ பொம்மையின் மீது அம்பு எய்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!