பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

 

தமிழகத்தைத் தாண்டியும் திரை ரசிகர்களிடையே வடிவேலு, பார்த்திபன் காம்போவை பிரபலப்படுத்திய படம் குண்டக்க மண்டக்க . இந்த படத்தை இயக்கிய, இயக்குநர் எஸ். அசோகன் காலமானார். அவருக்கு வயது 64.

1995-ம் ஆண்டு நெப்போலியன் மற்றும் ரஞ்சிதா நடிப்பில் வெளியான ‘தமிழச்சி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ். அசோகன். அதனைத் தொடர்ந்து பொன்விழா, குண்டக்க மண்டக்க ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் பகவத் கீதன் என்ற மகனும் உள்ளார்கள்.

சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் வசித்து வந்த எஸ்.அசோகன் இன்று மாரடைப்பால் காலமானார். சென்னையில் இருந்து அவரது உடல் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டைக்கு எடுத்து வரப்பட்டது. 

உள்ளிக்கோட்டையில் உள்ள தெற்கு தெரு இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின் இன்று இரவு இறுதிச் சடங்குகள் நடைபெற்ற உள்ளன. இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!