undefined

அடி தூள்!!  20 ஓவர் போட்டியில் இரட்டை சதம்!! அசத்தல் சாதனை படைத்த ரகீம் கார்ன்வால்!!

 

அமெரிக்காவில் அட்லாண்டா ஓபன் லீக் போட்டிகள் அட்லாண்டாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளின் விறுவிறுப்பான ஆட்டத்தால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரகீம் கார்ன்வால். இவர் அதிக எடை கொண்ட வீரராகவே அணியில் களம் இறங்கினார். அவர் சுழற்பந்து வீசுவது மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் தனது திறனை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவர் லீக் போட்டிகளில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி கலக்கி கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ரகீம் கார்ன்வால் பர்போடாஸ் அணிக்காக களம் கண்டார். அந்த போட்டி தொடரில் தனது அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகமடைய செய்தார்.அதைத்தொடர்ந்து அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்று வரும் அட்லாண்டா ஓபன் லீக் போட்டியில் ரகீம் கார்ன்வால் அட்லாண்ட் பயர் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார்.

அட்லாண்ட் பயர் அணி மொத்தம் 326 ரன்களை குவித்த நிலையில், எதிர்த்து விளையாடிய ஸ்கொயர் டிரைவ் அணியால் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே அட்லாண்ட் பயர் அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!