சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத்தீ! பக்தர்களுக்கு மலையேற தடை!

 

சதுரகிரி மலைப்பாதையில் சாப்டூர் வனச்சரகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் சதுரகிரி மலை ஏறுவதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5ம் தேதி வரை மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி.இங்கு சந்தன மகாலிங்கம்,  சுந்தரமகாலிங்கம் கோவில்கள் அமைந்துள்ளன. சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகை வனம் என்று போற்றப்படும் சதுரகிரி கோவிலுக்கு தமிழகத்திலிருந்து மட்டுமல்ல  இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

மாதம்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி சமயத்தில் திருவிழா கோலாகலமாக  கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், நடப்பாண்டில் செப்டம்பர் 26ம் தேதி காப்பு கட்டு வைபவத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. திருவிழா காரணமாக தினமும் இரவு 6 மணி முதல் 9 மணி வரை அம்மனுக்கு  சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு  வருகின்றன.  

இதனால், சதுரகிரியில் அக்டோபர் 5ம் தேதி வரை மலையேற அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் சதுரகிரி மலைப்பாதையில் சாப்டூர் வனச்சரகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ மேலும் தொடர்ந்து பரவி வருவதால் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நவராத்திரியில் சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யவந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!