தங்கத்தின் விலை சரிவு! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

 

கடந்த ஒரு வார காலமாகவே தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வந்தாலும், கடந்த இரு தினங்களாக குறைந்து வருகிறது. மேலும் தங்கத்தின் விலை குறைந்தாலும் பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு தங்கத்திற்கு இறக்குமதி வரி விதித்தபிறகு தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. ஒரு நாள் விலை குறைந்தாலும் அடுத்த நாளே தங்கத்தின் விலை இரட்டிப்பாக உயர்ந்து விடும். 


ஆனால் செப்டம்பர் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை சரிவை சந்தித்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் நேற்று செப்டம்பர் 22ம் தேதி தமிழகத்தில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ10 குறைந்துள்ளது. 


நேற்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 4640 ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.37120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராமிற்கு  வெள்ளி 20 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.62,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்ததால் தங்க முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!