இனி பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு கட்டணம்! தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்!

 

இதுநாள் வரை தமிழகத்தில் இலவசமாக செலுத்தப்பட்டு வந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இனி தனியார் மருத்துவமனைகளில் கட்டணத்துடன் செலுத்திக் கொள்ளலாம். இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திக் கொள்ளப்படுகிறது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு 18 முதல் 59 வயது வரை  அரசு மருத்துவமனைகளில் இலவச பூஸ்டர் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து, செயல்படுத்தி வந்தது.

தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகள், சிறப்பு மெகா முகாம்கள், சுகாதார நிலையங்களில்  இலவச பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. மத்திய அரசின் 75 நாட்கள் அவகாசம் செப்டம்பர் 30ம் தேதியுடன்  நிறைவடைந்த நிலையில், இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திக் கொள்ளப்பட்டது.

இனி, பூஸ்டர் தவணை தடுப்பூசியை  கட்டணம் செலுத்தி மட்டுமே செலுத்திக் கொள்ள முடியும். இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘‘ இந்தியாவில் 18 முதல் 59 வயது வரை  ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை தொடர்ந்து 75 நாட்கள்  இலவச பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

இத்திட்டப் பயன்பாடு நிறைவடைந்த நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

ஆனால், இதுவரை  மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால், இன்றிலிருந்து பூஸ்டர் தவணை தடுப்பூசியை தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தினால் மட்டுமே  போட்டுக் கொள்ள முடியும். இனிவரும் நாட்களில் ஒவ்வொரு  புதன்கிழமையும் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு முகாம்கள்  மூலம் கொரோனா தடுப்பூசி உட்பட 13 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

வியாழக்கிழமைகளில் 12 முதல் 17 வயதினர்களுக்கு கொரோனா தடுப்பூசி பள்ளிகளில் போடப்படும். வாரத்தின் அனைத்து நாட்களிலும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனைகளில் இலவச பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!