மாணவர்களே உஷார்!! ரயிலில் இதைச் செய்தால்   10 ஆண்டுகள் சிறைத் தண்டணை!! 

 

இந்தியாவில் தொலைதூர பயணங்களுக்கு மக்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். ரயில் பயணங்களில் குறிப்பிட்ட சில பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கத்தி, துப்பாக்கி,பட்டாசு, பெட்ரோல், டீசல், பயங்கர ஆயுதங்களை எடுத்துச் செல்ல தடை அமலில் உள்ளது. தற்போது இதனை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார ரயில்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அலப்பறைகள்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 ரயிலில் தொங்கியபடி செல்வது, பட்டாக்கத்தி உட்பட பயங்கர ஆயுதங்களுடன் பயணம் செய்வது, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிறக்கம் செய்வது என தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில் நேற்று தனியார் கல்லூரி மாணவர்கள் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்ததில் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் ஏற்கனவே ரயிலில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பயணம் செய்த 6 பேர் ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் பட்டாக்கத்தி வைத்திருந்ததாக ஊதிக்கொடையை சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

இந்நிலையில் ரயில்வே போலீசார் தனது அதிரடி உத்தரவில், பட்டாக்கத்தி உட்பட ஆயுதங்களை கொண்டு வருபவர்கள், படியில் தொங்கியபடி பயணம் செய்தால் இவைகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாணவர்கள்  படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் வாழ்வில் முன்னேறலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் இனி ரயில்களில் ஒழுக்கமாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!