ஸ்விக்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் , நடைப்பயணம்!! முடங்கிப்போன உணவு டெலிவரி !! 

 

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் முண்ணனியில் இருப்பது ஸ்விக்கி. ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று காலை சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரேத்பேட்டையில் இருந்து பெங்களூரில் உள்ள ஸ்விக்கி தலைமை அலுவலகத்திற்கு நடைபயணத்தை தொடங்கியுள்ளனர்.  நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டனர். இதனால் தினசரி ஆன்லைன் மூலம்  உணவு பெறும் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். உணவு டெலிவரி முற்றிலும் முடங்கிப்போனது.

புதிய திட்டத்தின் மூலம் தற்போது சம்பளம் பெற்று வரும் ஊழியர்கள் தங்களுக்கு பழைய முறையிலேயே சம்பளத்தை தர வேண்டும் என்று கோரி வைத்தும் எந்த பலனும் இல்லாததால் பேரணி தொடங்கியுள்ளது. மேலும் பழைய ஆப் மூலமே உணவு டெலிவரி நடைபெற வேண்டும் என்றும், புதிய ஆப் பயன்படுத்த வேண்டாம் என்றும் ஸ்விக்கி நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புதிய சம்பள முறையால் காலை 6 மணி முதல் மாலை 9 மணிவரை வேலை செய்வர்கள் வாங்கும் தொகையும், பகுதி நேரமாக வேலை செய்பவர்கள் வாங்கும் தொகையும் ஒன்றாக இருப்பதால் மோதல் எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே புதிய ஆப் மற்றும் சம்பளம் வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை மீறப்படும் பட்சத்தில் ஸ்விக்கி நிறுவனத்தை விட்டு வெளியேற போகிறோம் என்று அந்நிறுவன ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!