ரயில் டிக்கெட்டுகள் தீர்ந்தன! தொடர் பண்டிகைகள்! விமான டிக்கெட்டுகளின் விலையும் எகிறியது!

 

தசரா விடுமுறைகள், நவராத்திரி பூஜை, விஜயதசமி, தீபாவளி என தொடர்ந்து இனி பண்டிகை காலங்களாக இருப்பதை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு துவங்கி, டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன. ரயிலில் டிக்கெட் கிடைக்காத பொதுமக்கள் விமானங்களில் முன்பதிவு செய்ய துவங்கியதும், விமான டிக்கெட்டுக்களின் விலையும், வழக்கமான விலையை விட ராக்கெட் வேகத்தில் எகிற துவங்கியுள்ளது. சென்னை விமான நிலையங்களில், பயணிகள் கட்டணம் தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

செப்டம்பர் மாத இறுதியில் இருந்தே இந்தியாவில் பண்டிகை காலம் களைகட்டுவது வழக்கம். அதன்படி தசரா தொடக்கம், அக்டோபர் மாதத்தில் காந்தி ஜெயந்தி, தசரா, ஆயுத பூஜை, மிலாடி நபி, முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. அதன்படி அந்த விடுமுறை நாட்களை பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாட பேருந்து, ரெயில்களில் பயணிப்பது வழக்கம். அதில் சிலர் விமானங்களில் பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதன் காரணமாக சென்னையில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் பயண கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி ரூ.4,500 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் கட்டணம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

அதே போன்று ஜெய்ப்பூர் செல்லும் விமான கட்டணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாகவும், கொல்கத்தா பயண கட்டணம் ரூ.15,000ல் இருந்து ரூ.22,000மாக உயர்ந்துள்ளது. அகமதாபாத்திற்கு செல்ல ரூ.9 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் ரூ.11 ஆயிரம் வரையிலும், புனேவுக்கு ரூ.9 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பைக்கு ரூ.16 ஆயிரம் என்று டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  மதுரைக்கு ரூ.5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது இருமடங்காக உயர்ந்து ரூ.10 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து முக்கிய நகரங்களான திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூர் உட்பட பல நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் டிக்கெட் விலை உயர்வால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!