வைரல் வீடியோ!! சில்மிஷம் செய்த ரசிகரை ஓங்கி அறை விட்ட பிரபல நடிகை!!

 


பிரபலங்கள் பலர் சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிவின் பாலியின் நடிப்பில் தற்போது ‘சாட்டர்டே நைட்’ என்கிற மலையாள படம்  அக்டோபர் மாதம் 7ம் தேதி வெளியாக உள்ளது. இதன் புரமோஷன் பணிகள் ஜோராக நடைபெற்று வரும் நிலையில்,  புரமோஷன் நிகழ்ச்சி கோழிக்கோடில் உள்ள பிரபல மால் ஒன்றில் நடைபெற்றது. 


அந்த பார்ட்டியில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்ட ‘சார்ட்டர்டே நைட்’ படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக திரண்டது.புரமோஷன் முடிந்ததும் மாலில் இருந்து படக்குழுவினர் வெளியே செல்லும் போது ரசிகர்கள் கூட்டம் அவர்களை சூழ்ந்து கொண்டது. இதன் காரணமாக நடிகைகள் சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் கூட்ட நெரிசலில் மாட்டிக் கொண்டனர்.

அப்போது இதை சாக்காக வைத்து கூட்டத்தில் இருந்த ஒரு நபர் நடிகைகளிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடிகை சானியா ஐயப்பன் அந்த மர்ம நபரின் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைவிட்டுள்ளார். இதனால் அந்த இடமே அதிர்ந்து போனது.

இதை அங்கிருந்த நபர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து  கோழிக்கோடு பாண்டிரங்கான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.‘சாட்டர்டே நைட்’ திரைப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!