தட்சிணாமூர்த்தியை ஏன்? எப்படி? வழிபட வேண்டும்? தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்!
நம்மில் நிறைய பேர் இப்போது வரையில், நவகிரக குருபகவானையும், தட்சிணாமூர்த்தியையும் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள். குரு பெயர்ச்சியின் பொழுது தட்சிணாமூர்த்தியை விடாமல் தொடர்ந்து வழிபடுவார்கள். இன்னும் ஒரு படி மேல் சென்று, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றுவார்கள்.
தட்சிணா மூர்த்தியும் குரு பகவானும் ஒருவரல்ல என்பதே உண்மை. நவகிரக சந்நிதியில் வீற்றிருக்கும் குரு பகவானுக்கு உரிய திசை ‘வடக்கு’. தட்சிணாமூர்த்தியை தென்முகக் கடவுள் என்கிறோம். தட்சிணாமூர்த்தி சிவனின் அம்சமாக விளங்குபவர். சிவபெருமான் தன்னுடைய சனகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களை பயிற்றுவிக்க குருவாக திரு உருவம் பெற்று உபதேசிப்பதற்காக கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து ஆதி குரு, ஞான குருவாக காட்சியளிக்கின்றார்.
தட்சிணாமூர்த்தி வெண்பட்டு உடுத்தியிருக்கிறார். தட்சிணாமூர்த்தியை வணங்குவதற்கு தியானத்தில் ஈடுபட்டாலே போதும். ஞானம் பெற தட்சிணாமூர்த்தி மந்திரத்தை உச்சரித்தபடி தியான நிலையில் இருப்பது பெரும் பலன்களை கொடுக்கும். பக்தர்கள் இனியும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றுவது, கொண்டைக்கடலை மாலை அணிவிப்பது என கொடுமைகளைச் செய்யாதீர்கள்.
தட்சிணாமூர்த்தி ஒரு காலில் முயலகனை மிதித்த படியும், மற்றொரு காலை வீராசனமாக வைத்த படியும் இருப்பார். சிவபெருமானின் 64 வடிவங்களில், குரு வடிவாக திகழ்பவர் தட்சிணாமூர்த்தி. யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி என்ற பெயர்களும் உண்டு. சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோருக்கு யோக முறையை காட்டியதால், யோக தட்சிணாமூர்த்தி என்றும், தும்புரு, நாரதர் ஆகியோருக்கு வீணையின் இலக்கணத்தை உணர்த்தியதால், வீணா தட்சிணாமூர்த்தி என்றும் அழைக்கிறோம்.
தட்சிணாமூர்த்தியின் சின் முத்திரை, ஞானத்தைக் குறிக்கிறது. சின் முத்திரைப்படி சுட்டுவிரல், பெருவிரலின் அடியோடு சேர்ந்திருக்கும். மற்ற மூன்று விரல்களும் ஒதுங்கிய நிலையில் இருக்கும். பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் ஆன்மாவையும் குறிக்கிறது. மற்ற மூன்று விரல்களில் நடுவிரல் ஆணவத்தையும், அணிவிரல் மலத்தையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். ஆணவம், மலம், மாயை ஆகியவற்றை கடந்தால், ஆன்மா இறைவனோடு சேரலாம் என்பதே இந்தத் தத்துவத்தின் விளக்கமாகும்.
தினமும் தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட்டால், ஞானம் கிடைக்கும். குருவருள் பெறலாம். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். சகல நிம்மதியும் வாழ்வில் வசப்படும்.
தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்:
‘ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்தாய தீமஹி
தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்’
இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் பயம் நீங்கும். வித்தைகளில் மேன்மை அடையலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இந்த திதியை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பகீர்! 4வது மாடியின் விளிப்பில் நின்று கண்ணாடியைத் துடைக்கும் பெண்மணி!