undefined

 ஒரே மாதத்தில் 4 வது சம்பவம்... 4 வயது சிறுமியை ஓட ஓட கடித்து குதறிய தெருநாய்கள்... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 

 சென்னை பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் வசித்து வருபவர் அமீத். 32 வயதாகும் இவர் பழக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தாயுப்பேகம். இவருக்கு  அனிஷா, தனிஷா என 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன் தினம்   மாலை தாயுப்பேகம் தனது 2 மகள்களுடன் அருகே உள்ள மசூதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.  ரமணா நகர் பழைய குடியிருப்பு பகுதி அருகே வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த அனிஷாவை, அங்கிருந்த 4 தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடிப்பதற்காக பாய்ந்தன.  பயந்துபோன சிறுமி அனிஷா, அலறி அடித்தபடி  ஓடினாள்.

4 நாய்களும் அவளை விரட்டிச்சென்று சுற்றி வளைத்து கடித்தன. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தாயுப்பேகம், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கீழே கிடந்த கல்லை எடுத்து நாய்கள் மீது வீசி விரட்டியடித்தார்.  அதற்குள் 4 நாய்கள் சேர்ந்து கடித்ததில் அனிஷாவின் காலில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   சிறுமியை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் காட்சிகள் அங்குள்ள ஒரு வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகின. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  சென்னையில் பல்வேறு இடங்களில் வளர்ப்பு நாய்கள், தெரு நாய்கள் சிறுமிகள், பொதுமக்களை கடித்து குதறும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!