4 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை... இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் காளீஸ்வரன்(25) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா நேற்று குற்றவாளி காளீஸ்வரனுக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் தீர்ப்பு வழங்கினார். 

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அமிர்த ஜோதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார். இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 25 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க