55 வயதில் 17வது குழந்தையை பெற்றெடுத்த பெண்.. இது ராஜஸ்தான் சாதனை!
ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் மாவட்டம் ஜாடோல் தொகுதியில் லிலாவாஸ் கிராமத்தில் வசித்து வருபவர் 55 வயது பெண் ரேகா. இவரது கணவர் கவரா ராம் கல்பேலியா. இந்த தம்பதிக்கு தற்போது 16 குழந்தைகள். இதில் 4 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டது. தற்போது 7 மகன்கள், 5 மகள்கள் என ஏற்கனவே 12 பேர் உள்ளனர்.
இதில் 2 மகன், 3 மகள்களுக்கு திருமணமாகி ஒவ்வொரு தம்பதிக்கும் 2 அல்லது 3 குழந்தைகள் உள்ளனர். மகன்கள், மகள்கள் வழியாக பேரக்குழந்தை பெற்ற நிலையில் ரேகா திடீரென மீண்டும் கர்ப்பமானார். ஆகஸ்ட் 24ம் தேதி ஜாடோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது. ரேகாவைப் பார்க்க உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், கிராம மக்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.
17 வது குழந்தையை பேரக்குழந்தைகள் புடைசூழ கொஞ்சி மகிழ்ந்தார். ரேகா குடும்பத்தில் இதுவரை யாரும் பள்ளிக்குச் சென்றதில்லை. ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்குவதில்லை. மகப்பேறு மருத்துவர் ரோஷன் தரங்கி ,’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ரேகா தனக்கு இது 4 வது பிரசவம் என்று கூறியிருந்தார். பிறகு தான் இது உண்மையில் அவருடைய 17வது பிரசவம் எனத் தெரியவந்தது. இனி அவருக்கு கருத்தடை செய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!