திருடு போனதாக கலெக்டரிடம் புகாரளித்த 90 வயது மூதாட்டி... புதிய ரேடியோ வழங்கியதால் மகிழ்ச்சி!

 

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணி பகுதியில் வசிக்கும் ஆதிலட்சுமி (90) என்ற மூதாட்டி, தனியாக வாழ்ந்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், நேரத்தை கழிக்க இசை கேட்கும் ஆர்வத்தில் ரூ.700 செலவில் ரேடியோ ஒன்றை வாங்கியிருந்தார். தினமும் எப்.எம். ரேடியோவில் பாடல்கள் கேட்டு மகிழ்ந்த அவருக்கு, அது ஒரு துணைபோல இருந்தது.

ஆனால், சுமார் ஒரு ஆண்டுக்கு முன் அவரது வீடில் இருந்த அந்த ரேடியோ மர்ம நபரால் திருடப்பட்டதால், அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். இது குறித்து புளியங்குடி போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தன்னுடைய மனவேதனையை வெளிப்படுத்திய அவர், தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் சமீபத்தில் மனு அளித்தார். “என் ரேடியோவைத் திரும்பக் கண்டுபிடித்துத் தர வேண்டும். தினமும் பாடல் கேட்காமல் இருப்பது மிகவும் கடினமாக உள்ளது; நான் ஏதோ ஒன்றை இழந்ததாக உணர்கிறேன்” என்று மனுவில் தெரிவித்தார்.

முதியவரின் விருப்பம் சமூகத்தில் பரவியதைத் தொடர்ந்து, ஹலோ எப்.எம். நிர்வாகத்தினர் முன்வந்து நேற்று ஆதிலட்சுமிக்கு புதிய ரேடியோ ஒன்றை வழங்கினர். அதை பெற்ற அவர் கண்கலங்கிய நிலையில் நன்றி தெரிவித்தார். மூதாட்டியின் எளிய வேண்டுகோளே பலரையும் உருக்கி, மனிதாபிமானம் இன்னும் உயிருடன் இருப்பதை நினைவூட்டும் சம்பவமாக இது பேசப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க