’பெரும் ஆச்சரியம் காத்திருக்கிறது’.. இஸ்ரேலை பகிரங்கமாக எச்சரித்த ஹிஸ்புல்லா அமைப்பின் செயலாளர்!
ஹமாஸ்-இஸ்ரேல் போர் 8வது மாதத்தை எட்டியுள்ள நிலையில், லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் செயலாளர் ஹஸன் நஸ்ரல்லாஹ் எதிர்ப்பு மற்றும் விடுதலை தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
அப்போது அவர், "எங்கள் தரப்பிலிருந்து உங்களுக்கு (இஸ்ரேல்) ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. சமாளிக்க தயாராக இருங்கள்" என்று எச்சரித்தார்.
மேற்கத்திய ஆதரவையும் மீறி இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை நஸ்ரல்லா பட்டியலிட்டார். பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்திருப்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரும் இழப்பாகும் என்றார்.
இராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டும் இஸ்ரேல் சர்வதேச தீர்மானங்களை மதிக்கவில்லை என்றும் ரபா மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதாகவும் நஸ்ரல்லா குற்றம் சாட்டினார். பாலஸ்தீனப் பிரச்சினை மற்றும் காஸா விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுடன் ஈரானிய ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா போரில் ஈடுபட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!