அரசு பேருந்து பைக் மீது மோதியதில் கல்லூரி மாணவன் மரணம்!
திருநெல்வேலி மாவட்டம் வெள்ளிசந்தை அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் தேவதாசன் மகன் டென்சிங் ராஜா (18). இவர் நாகர்கோவில் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் முத்துராஜா (18) இருவரும் நண்பர்கள். நேற்று மாலை இருவரும் பைக்கில் வெள்ளி சந்தை சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை டென்சிங் ராஜா ஓட்டினார்.
ஈத்தங்காடு திருப்பில் சென்ற போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று திடீரென பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், டென்சிங் ராஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். முத்துராஜாவுக்கு இடதுகாலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெள்ளி சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!