அதிசய ஆச்சர்யம்!! பிறந்த 3 நாட்களில் தவழ்ந்த குழந்தை!!
குழந்தை பிறந்து அதன் கழுத்து நிற்கவும், குப்புற விழவும், தலையை தூக்கி பார்க்கவும் சாதாரணமாக 4 முதல் 5 மாதங்கள் ஆகலாம். ஆனால் சில குழந்தைகள் இதற்கு விதிவிலக்கு . இன்னும் முன்னாலேயே நடக்கலாம். சில நாட்களுக்கு முன் பிறந்த உடனே குழந்தை பேசியதாக தகவல் வெளியானது. சில குழந்தைகள் பற்களுடன் பிறப்பதுண்டு. அதே போல் அமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை ஒன்று தலையுயர்த்தி பார்த்து, தவழ்ந்து நகர்ந்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிறந்த குழந்தைக்கு 300 எலும்புகள் வரை இருக்கும். வளர வளர ஒன்றுடன் ஒன்று இறுகி 206 எலும்புகளாக மாறும். இந்த எண்ணிக்கை அனைவருக்கும் பொருந்தாது. நாளடைவில் குழந்தைகள் வளர வளர ஒவ்வொரு எலும்பாக ஒன்று சேர்ந்து 206ஆக குறைந்துவிடும். எனவேதான் குழந்தைகள் பிறந்தவுடன் நடக்காமலும், கழுத்து நிற்காமலும் இருக்கிறது. இந்த கழுத்து வலுவடைய குறைந்தபட்சம் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம்.
குழந்தை பிறந்தவுடன் பூனை முடி கழுத்திலும், மார்பிலும் குட்டி குட்டியாக தெரியும். பார்வை குறிப்பிட்ட இடத்தில் நிலைத்து நிற்காமல் அங்குமிங்குமாய், தொட்டியில் உள்ள மீனை போல அலைந்துக்கொண்டிருக்கும். அதேபோல அடிக்கடி அழவும் செய்யும். இந்த அழுகை எதற்காக என புரிந்துகொள்வது சற்று கடினம். பச்சிளம் குழந்தைகளுக்கு 18 மணி நேர உறக்கம் அவசியம். அப்போதுதான் குழந்தையின் வளர்ச்சி சீரானதாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்துடன் தாய்ப்பால் மட்டும் கொடுத்தால் போதுமானது. இப்படியாக குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக வளரச்சி அடையும். ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு இது விதி விலக்கு. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒயிட் ஓக் நகரில் வசித்து வரும் சமந்தா எனும் இளம் பெண்ணுக்கு பிறந்த இந்த குழந்தை தான் இப்படி விதிவிலக்காக இருக்கிறது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!