பிரபல பாலிவுட் நடிகர் வங்கிக்கணக்கில் ரூ77000 அபேஸ்... ஆன்லைனில் மருத்துவரை தேடிய போது விபரீதம்!
பிரபல பாலிவுட் நடிகர் மொகமத் இக்பால் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தான் தங்கியிருக்கும் தாதர் பகுதியில் எலும்பு சிகிச்சை மருத்துவர் ஒருவரை பார்க்க வேண்டும் என ஆன்லைனில் மருத்துவரை தேடியுள்ளார். இவருக்கு ஆன்லைனில் ஒரு மருத்துவர் நம்பர் கிடைத்த நிலையில் அவருக்கு செல்போன் மூலம் பேசியுள்ளார். அதில் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்கு ரூ10 அனுப்ப வேண்டும் என 2 லிங்குகள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவரால் பணத்தை அனுப்ப முடியவில்லை.
பிறகு ஏதோ பிரச்சினை இருப்பதை அறிந்த இக்பால் தன்னுடைய வங்கி மேலாளரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 4 நாட்கள் கழித்து அவருடைய போனுக்கு அடுத்தடுத்து மெசேஜ் வந்துகொண்டே இருந்தது. அதன்படி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ77000 எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலிவுட் நடிகர் உடனடியாக சைபர் பிரிவு நம்பருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!