லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதல்... 3 பேர் உடல் நசுங்கி பலி!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் இன்று ஜூலை 10ம் தேதி வியாழக்கிழமை நிகழ்ந்த கோர விபத்தில், கண்டெய்னர் லாரியும் ஈச்சர் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் கிளினரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆனால், அவர்களின் அடையாளங்கள் அல்லது மேலும் தனிப்பட்ட விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இந்த வாகனங்கள் இரண்டும் கனரக வாகனங்கள் என்பதால், மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!