காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது... தமிழகத்தில் நவம்பர் 25 வரை கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் நாளை முதல் நவம்பர் 25ம் தேதி பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழையில் ஏற்பட்ட குறுகிய இடைவெளியால் மழை குறைந்திருந்தது. சில பகுதிகளில் மட்டும் வெப்பசலனத்தால் லேசான மழை பதிவாகியிருந்தாலும், பருவமழை தீவிரம் இல்லை.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவகாற்று மாநிலம் முழுவதும் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை நவம்பர் 16ம் தேதி முதல் தமிழகத்தில் பலத்த மழை தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகவும், பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தயாராக இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் (டெல்டா வெதர்மேன்) எச்சரித்துள்ளார். இந்த மழை நவம்பர் 25ம் தேதி வரையில் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது தகவலின்படி இன்று இலங்கை அருகேயுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக உள்ளது. இதன் தாக்கத்தில் 16–ம் தேதி முதல் தமிழகத்தில் மழை ஆரம்பமாகும். 17, 18–ம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கன மழை, சில இடங்களில் மிக கன மழையும் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று நவம்பர் 18, 19ம் தேதிகளில் உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலான கனமழை ஏற்படும். லட்சத்தீவு நோக்கி நகரும் தாழ்வுநிலை காரணமாக, 20–ம் தேதியும் தமிழகத்தில் மழை நிலைவைக்கும் என்றும் அவர் கூறினார். நீர்நிலைகள் நிரம்பும் நிலையில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை மற்றொரு புதிய தாழ்வுப்பகுதி உருவாகி, அது தீவிர தாழ்வுப்பகுதியாக மாற்றமடைந்து வடக்கடலோரம் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை மிகுந்த தீவிரம் பெறும்.
தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலும் ஒரு தாழ்வுப்பகுதி உருவாகப் போகிறது. இது அடுத்தடுத்த நிலைகளை கடந்து புயலாக வலுப்பெறும் சூழல் இருப்பதாகவும், முந்தைய இரண்டு அமைப்புகள் முடிவடையும் பின்னர் அதன் பாதை, வலிமை, கரையிறங்கும் இடம் போன்ற விபரங்கள் தெளிவாகும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
நவம்பர் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 25ம் தேதி வரை தமிழகத்தில் தொடர்ச்சியான மழை நிலவக்கூடும் என்றும், பெரிய அளவிலான வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டிட வாய்ப்பு குறைந்தாலும், நீர்நிலைகள் நிரம்பி மக்களும் அதிகாரிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல் உள்ளது என்றும் வானிலை தகவல்கள் எச்சரிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க