undefined

  பல வருஷங்கள் ஒரே செல்போன் நம்பரை பயன்படுத்தினால் தனிக் கட்டணம்?... பயனர்கள் ஷாக்!

 


தற்போதைய வாழ்க்கை முறையில் 6 மாத கைக்குழந்தை முதல் முதியவர்கள் வரை  கைகளில் ஆறாம் விரலாக செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் பயன்படுத்துபவர்கள்  அதற்கு ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ஒரே நம்பரை பல காலம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதற்கு  விரைவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து  இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான டிராய் மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி 2023ல் புதிய டெலிகாம் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் தனிக் கட்டணம் செலுத்தும் முறை பரிந்துரை செய்யப்பட்டது.


ஒரே நபர் 2  செல்போன் எண்களை  பயன்படுத்தும் போது ஒரு நம்பரை மட்டும்தான் அதிகமாக பயன்படுத்துவார். மற்றொரு சிம் கார்டை அவ்வப்போது ரீசார்ஜ் செய்து வைத்துக் கொள்வார். இதனால் இப்படியான 2 சிம் கார்டுகள் பயன்படுத்துபவர்கள் நீண்ட காலமாக ஒரு நம்பரை மற்றவர்களுக்கு தராமல் தானும் உபயோகிக்காமல் டம்மியாக வைத்துள்ளனர். இதனால் அவர்களிடம் அதற்காக தனி கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணம் வாடிக்கையாளர்களிடமிருந்து நேரடியாக வசூலிக்கப்படும் என டிராய் தெரிவித்துள்ளது.  இந்த முறை சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏற்கனவே இந்த நடைமுறை அமலில் உள்ளது.    இந்த அதிகப்படியான கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறையா அல்லது மொத்தமாக ஒரே ஒரு முறை மட்டுமா என்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!