undefined

நீதிமன்ற வாசலில் பரபரப்பு...  கணவரை  செருப்பால் அடித்த பெண்!  

 


 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராம்பூர்  நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே, ஒரு பெண் தனது கணவர் மீது செருப்பால் தாக்குதல் நடத்தியுள்ளார். இச்சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் கடந்த நிலையில்  திருமணம் ஆன சிறிது காலத்திலேயே அவரது கணவர் அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார். வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்த அவர், இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த பிறகு, குழந்தைகளுடன் சேர்த்து அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இதன் காரணமாக, அவர் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதன் பின்னர், குழந்தைகளையும் கணவர் வலுக்கட்டாயமாக பிரித்து சென்றுவிட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த வெள்ளிக்கிழமை அந்த பெண் தனது அத்தையுடன் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அங்கே அவரது கணவரும், மாமனாரும் வந்திருந்தனர். விசாரணை முடிந்து வெளியே வந்ததும், கணவரும் மாமனாரும் அவரை பின் தொடர்ந்து வந்து, வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டியுள்ளனர். அப்போது, மாமனாரின் தூண்டுதலின் பேரில் கணவர், 'தலாக்' என்ற வார்த்தையை மூன்று முறை சொல்லி விவாகரத்து செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின்னர், இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர்.

கணவரும் மாமனாரும் தன்னை தாக்கியபோது, தற்காப்புக்காக தன் செருப்பை எடுத்து கணவரின் குர்தாவை இழுத்து சரமாரியாக அப்பெண் அடித்தார். இந்த சண்டையில் கணவரின் குர்தா கிழிந்துவிட்டது. அப்பெண் கணவரையும் மாமனாரையும் துரத்தி துரத்தி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?