undefined

ஆதார் திருத்தக் கட்டணம் விரைவில் உயரலாம்.. வெளியாகும் தகவல்!

 


 இந்தியாவில் தனிமனிதனின் அடையாளம் ஆதார். ஆதார் பொதுவாக ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட  12 இலக்க  அடையாள எண் ஆகும். இந்தியாவின்  முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படும் ஆதார், வங்கி கணக்கு தொடங்குதல், சிம் கார்டு பெறுதல் உட்பட  பல்வேறு சேவைகளுக்கு தேவையாகின்றது.

இந்நிலையில் ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் விரைவில் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கான புதிய கட்டண மாற்றம் அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கக் கூறப்படுகிறது. இதுகுறித்து யு.ஐ.டி.ஏ.ஐ. அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை எனினும், முகவரி மாற்ற சேவைக்கான கட்டணம் தற்போது உள்ள ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக உயருகிறது. அதேபோல் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பிற புதுப்பிப்பு சேவைகளின் கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட உள்ளது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கக்கூடும் என்றாலும், உயர்வு மிகக்குறைந்த அளவில் மட்டுமே உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?