கோடி நன்மை தரும் ஆடி செவ்வாய் வழிபாடு... எப்படி வழிபடுவது? என்னென்ன பலன்கள்?!
இன்று ஆடி மாத செவ்வாய்க்கிழமை. ஆடி மாத செவ்வாய்க்கிழமை வழிபாட்டை மிஸ் பண்ணாதீங்க. இந்த ஆடி மாதத்தில் தான் சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார். பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். எனவேதான் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம். ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம்.
அதன் காரணமாக தான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வருகிறோம். இதற்கு அறிவியல் பூர்வமான காரணங்களும் உள்ளன. இந்த மாதத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழை வருவதால் பூமி உஷ்ணமாக இருக்கும். அந்த நேரத்தில் மேற்சொன்னவையைஅம்மனுக்கு படைத்து உண்டு வந்தால் உடல் நலம்பெறும் சீரான வெப்பநிலையை அடையும் என்பதே ஆகும்.
அந்த வகையில் ஆடி அறுதி என்பது ஆடி மாதத்தின் கடைசி நாளாகும். மற்ற மாதங்களைப் போல அல்லாமல், தமிழ் மாத அடிப்படையில் வரும் ஆடி மாதத்திற்கு 32 நாட்கள் உள்ளன.ஆடி அறுதி எந்த கிழமையில் வருகின்றது என்ற அடிப்படையில் கூடுதல் சிறப்பைப் பெறும். இந்த ஆண்டு, ஆடி அறுதி நாளை (ஆக. 16) செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளி இரண்டு நாட்களுமே ஆடி மாதத்தில் சிறப்பான, அம்மனுக்கு உகந்த நாளாகக் கருதப்படுவதால், இந்த ஆண்டு ஆடி அறுதி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கு ஏற்ப, ஆடி மாதம் தொடங்கிய முதல் நாளில், விவசாயிகள் விதை விதைப்பார்கள். அதே போல, ஆடி அறுதி அன்று, நாற்று நடுவார்கள். விவசாயிகளை காக்கும் காவிரி ஆற்றை தெய்வமாக, ஆடி பதினெட்டு அன்று வணங்கி, குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடியிருப்பார்கள். அடுத்தது மழைக்காலம் என்பதால், ஆடி மாதம் முடியும் நாளில், விவசாயத்தின் அடுத்த கட்டமாக, நாற்று நடுவார்கள்.
எல்லா செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் அம்மன் வழிபாட்டுக்கு சிறந்தது. இந்த ஆண்டு ஆடி அறுதி செவ்வாயில் வருவது மிகவும் சிறப்பானது. செவ்வாய் கிழமைகளில் இதுவரை நீங்கள் தொடர்ந்து அம்மனை வழிபட்டு வந்தாலும், செவ்வாய் அல்லது வெள்ளியில் உங்களால் அம்மன் கோவிலுக்கு சென்று இந்த மாதத்தில் வழிபட முடியவில்லை என்றாலும் வரும் நாளை ஆடி மாத செவ்வாய்க்கிழமை தவறாமல் அம்மன் கோயிலுக்கு சென்று வாருங்கள். வாய்ப்பு இருப்பவர்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் ராகு கால பூஜையில் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபடுவது வேண்டிய வேண்டுதல்களை நிறைவேற்றும்.
ஜோதிட ரீதியாக ஆடி மாதத்தில் கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். அதற்கு அடுத்த மாதமான ஆவணி மாதம் முதல் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு ஆட்சியாக சூரியன் பெயர்ச்சி ஆவார். சந்திரன் அம்பாளையும் சூரியன் சிவபெருமானையும் குறிக்கும். ஒருமாத காலமாக அம்பாளின் வீட்டில் சிவபெருமான் இருந்து, ஆவணி மாதம் முதல் தனது சொந்த வீட்டில் சஞ்சரிப்பார். எனவே ஆவணி மாதம் தொடக்கத்திற்கு முன்பாக ஆடி மாதத்தின் கடைசி நாளன்று சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நினைப்பதெல்லாம் நிறைவேறும் என்பது ஐதீகம். சங்கு புஷ்பம், வில்வ இல்லை, விபூதி, இளநீர் போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம், ஆராதானை செய்தால் தோஷங்கள் நீங்கும். அதே போல, ஏதேனும் ஒரு கோவிலில் வசதிக்கு ஏற்றவாறு, அன்னதானம் செய்யலாம்.
தையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!