undefined

ஆடி ஞாயிறு... துறைமுகத்தில் மீன்கள் வாங்க அலைமோதிய பொதுமக்கள்!

 

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறைந்து காணப்பட்டது. 

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு மீன்பாடு நன்றாக இருந்ததால் பெரிய அளவிலான சீலா மீன்கள் அதிகளவில் கிடைத்தன. அதேபோல் ஊளிமீன், விளைமீன், பாறைமீன், சூரைமீன் போன்ற மீன்களும் அதிக அளவில் கிடைத்தன.

அவையனைத்தையும் படகில் அள்ளிக்கொண்டு மீனவர்கள் கரை திரும்பினர். இதனால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்கள் அதிகளவில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. தொடர் விடுமுறை காரணமாக நேற்று காலை முதலே பொதுமக்களும், வியாபாரிகளும் மீன்கள் வாங்க தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர்.

போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றதால் வியாபாரம் களைகட்டியது. இதனால் மீன்களின் வரத்து அதிகம் இருந்தாலும் நஷ்டமில்லாமல்விற்று தீர்ந்ததால் வியாபாரிகள்மகிழ்ச்சியடைந்தனர். தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் நேற்று சீலா மீன் ஒரு கிலோ ரூ.1200 வரையும், விளைமீன், ஊளி மீன், பாறை மீன்கள் கிலோ ரூ.300 முதல் ரூ.550 வரையும் விற்கப்பட்டன.

அதே போல கிளை வாழை மீன் கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையும், நகரை மீன் கிலோ ரூ.300 வரையும், சூரை மீன் கிலோ ரூ.200 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ.1800 வரையும், வங்கனை ஒரு கூடை ரூ.1500 வரையும் விற்பனையானது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?