undefined

தாலி கட்டும் நேரத்தில் அதிரடி.. 16 வயது மாணவியை திருமணம் செய்தவர் கைது!

 

திண்டுக்கல் அருகே 16 வயது சிறுமி 9ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கும், சிறுமியின் உறவினரான திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதனால் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதால், திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. இளைஞ்சர் கோவையில் வேலை பார்த்து வருவதால், இருவரும் நேற்று கோவை அருகே உள்ள கிராம திருமண மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்துவிட்டு போலீஸாருடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் சிறுமியின் கழுத்தில் தாலியை கட்டியுள்ளார். சிறுமிக்கு 16 வயது ஆனதால் திருமணம் செல்லாது என்பதால் போலீசார் சிறுமியையும், வாலிபரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அந்த இளைஞர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சிறுமியை காப்பகத்தில் ஒப்படைக்கலமா? அல்லது கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெற்றோருடன் அனுப்பலாமா என்று முடிவு செய்ய உள்ளனர். சிறுமியின் கழுத்தில் தாலி கட்டிய கையோடு  2 பேரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றதால் திருமண மண்டபமே பெரும் பதற்றத்தில் சூழ்ந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!