பிரபல யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை... தமிழக மருத்துவத்துறை திடீர் அறிவிப்பு!
பிரபல யூடியூபர் இர்ஃபான் . இவர் செலிபிரிட்டிகளுடன் உணவுகளை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இதில் உள்ளூர் முதல் வெளிநாடு வரை சென்று புட் ரிவ்யூ செய்து வரும் இர்ஃபான் சமீபத்தில் குக் வித் கோமாளி 5 ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். இவர் 2023ல் ஹசீஃபாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது ஹசீஃபா கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில் இர்ஃபான் துபாய்க்கு மனைவியை அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிந்து கொண்டு அதனை நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் பேசுபொருளாகவும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவெடுத்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. அதில் இர்ஃபான் தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பகிரங்கமாக அறிவித்ததால் இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!