அரசு பேருந்துகளை 48 மணி நேரத்துக்குள் ஆய்வு செய்ய  அதிரடி   உத்தரவு!

 

 தமிழகத்தில்  உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என   போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பேருந்துகள் சேதமடைவது தொடர்பான புகார்கள் எழுந்தது. ஒரு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் மாநகர பேருந்தின் நாற்காலியுடன் நடத்துனர்  சாலையில் விழுந்த காட்சி, புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.  

இதனையடுத்து  விருதுநகர்  பேருந்திலும்  சேதம் ஏற்பட்டது.  இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பேருந்துகள் எவ்விதம் இயங்குகின்றன என்பது குறித்து தமிழ்நாடு தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.  இந்த ஆலோசனை கூட்டத்துக்கு  பிறகு போக்குவரத்துக்கு துறை  விரிவான உத்தரவை அனைத்து போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கும்  அனுப்பியுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கப்படும் விரைவு பேருந்துகள் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கப்படும் வெளியூர் பேருந்துகள் சென்னையில் இயங்கப்படும் மாநகர பேருந்து உட்பட  20,000 பேருந்துகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்த பின் அந்த பேருந்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை உடனடியாக கண்டறிய வேண்டும். அந்த குறைகளை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!