நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

 

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நடிகர் ரோபோ சங்கர், சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலமானார். 

நேற்று முன்தினம்  சென்னையில் கௌதம் வாசுதேவ் மேனன் - தர்ஷனின் ‘காட்ஜில்லா’ படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த போது, படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரோபோ சங்கருக்கு திடீரென நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு, ரத்த அழுத்தம் குறைந்ததால் படப்பிடிப்பு தளத்திலேயே மயக்கமடைந்தார். உடனடியாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். 

நடிகர் ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினரிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரோபோ சங்கரின் உடல் இன்றிரவு அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

சின்னத்திரையில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமான ரோபோ சங்கர், திரையுலகிலும் அறிமுகமாகி ரசிகர்களிடையே குறுகிய காலத்தில் பிரபலமடைந்தார். விஜய்யுடன் புலி, அஜித்துடன் விஸ்வாசம், தனுஷின் மாரி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகர் ரோபோ சங்கர், கடந்த சில வருடங்களாகவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?