நடிகர் சிவகார்த்திகேயனின் 3வது குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா... வைரலாகும் வீடியோ!
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மூன்றாவது குழந்தைக்கு பவன் சிவகார்த்திகேயன் எனப் பெயரிட்டுள்ளார். இந்த பெயர் சூட்டும் விழாவின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இந்த வீடியோவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து, தனது மனைவி ஆர்த்தி மூன்று குழந்தைகளையும் பெற்றெடுத்த போது எந்தவிதமான வலியை அனுபவித்தார் என்பதை ஆப்ரேஷன் தியேட்டரில் அருகில் இருந்து பார்த்ததாகக் கூறியுள்ளார். மேலும் அவருடைய வலியை தான் புரிந்து கொள்வதாகவும் இந்த அழகான உலகத்தைத் தனக்கு உருவாக்கிக் கொடுத்ததற்காக என்றென்றும் நன்றியுடன் இருப்பேன் எனவும் மனைவி மீதான காதலை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களும் திரையுலகினரும் தங்கள் வாழ்த்துகளை சிவகார்த்திகேயன் குடும்பத்திற்கு கூறி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!