திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்!
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக பெயர் பெற்ற யோகி பாபு நேற்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
காலையில் கோவிலுக்கு வந்த யோகி பாபு, வழிபாட்டு மரியாதைகள் அனைத்தையும் முறையாக செய்து, முருகன் பெருமாளை தரிசனம் செய்தார். பின்னர், ஆலயத்துக்குள் வந்த பக்தர்கள் பலரும் அவரை அடையாளம் கண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
சிலர் யோகி பாபுவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். யோகி பாபுவும் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அன்புடன் புகைப்படம் எடுக்க அனுமதித்தார். கடந்த மாதம் 6ஆம் தேதி அவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலிலும் சாமி தரிசனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க